search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் மயம்"

    • பயாலஜி ஆசிரியர் மற்றும் கெமிஸ்ட்ரி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மாணவியை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளார்.

    12 வகுப்பு முடித்த மாணவர்கள் இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வை கடந்த 2016 ஆம் தேதி மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதன்படி டாக்டர் கனவோடு பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களைப் பெற்றோர் தனியார் கோச்சிங் சென்டர்கள் வசம் ஒப்படைத்தனர்.

    இதனால் நாடு முழுவதும் கோச்சிங் சென்டர்கள் பல்கிப் பெறுகிறன. தனியார் கோச்சிங் சென்டர்களில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவிகள் தற்கொலை என அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் மருத்துவ கனவவோடு கோச்சிங் சென்டரில் பயின்று வந்த மாணவி அங்குள்ள ஆசிரியர்களால் 6 மாத காலமாக பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் பதேப்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி கான்பூர் நகரில் உள்ள பிரபல பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார். 2022 இல் சிறுமிக்கு 17 வயது இருக்கும்போது இந்த கொடூரம் நடந்துள்ள நிலையில் தற்போது அவர் முன்வைத்து புகார் அளித்ததால் கோச்சிங் சென்டர் குட்டு வெளிப்பட்டுள்ளது.

    உயிரியல் [பயாலஜி] ஆசிரியர் சாஹில் சித்திக் (வயது 32), வேதியியல் [கெமிஸ்ட்ரி] ஆசிரியர் விகாஸ் பொர்வால் (வயது 39) என 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 2 பேருக்கு எதிராக பாலியல் பலாத்காரம், முறைகேடாக வீட்டில் அடைத்து வைத்தல், குற்ற உள்நோக்கம் மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு டிசம்பரில் நியூ இயர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கல்யாண்பூரில், மக்தி-கேரா பகுதியில் உள்ள நண்பரின் அபார்ட்மென்டுக்கு வரும்படி சித்திக் அந்த மாணவியை அழைத்துள்ளார். மற்ற மாணவிகளும் வருவார்கள் என கூறியுள்ளார்.

    விடுதியில் தங்கி படித்த அந்த மாணவி அபார்ட்மென்டுக்கு சென்றபோது, சித்திக் தவிர யாருமில்லை. இதன்பின்னர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்கிறார். இதன்பின்னர், மாணவியை பலாத்காரம் செய்து, சித்திக் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார்.

    தொடர்ந்து 6 மாதங்களாக அபார்ட்மென்ட்டில் சிறை வைத்து, மாணவியிடம் சித்திக் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வேறு யாரிடமும் கூறினால் வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்து விடுவேன் என மிரட்டியும் இருக்கிறார். சில மாதங்களில், ஆசிரியர் பொர்வாலும் மாணவியை பலாத்காரம் செய்திருக்கிறார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனை பற்றி போலீசிடம் கூறினால், அது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படுத்தி விடும் என மாணவி பயந்து இருக்கிறார். 6 மாதங்களுக்கு பின்னர், கான்பூருக்கு வந்து மகளை அவருடைய தாய் அழைத்து சென்றிருக்கிறார்.

    தொடக்கத்தில் போலீசுக்கு போக தயக்கம் காட்டிய அந்த மாணவி, இதன்பின்பு, வேறொரு பயிற்சி மாணவியை, சித்திக் பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோ வைரலாகியது. இதனை பார்த்ததும் முடிவை மாற்றிக்கொண்டார். இந்த வழக்கில், ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதனை தொடர்ந்தே மாணவி போலீசில் புகார் அளிக்க துணிந்துள்ளார்.

    இதன்பின்னர், கல்யாண்பூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த எப்.ஐ.ஆர் ஒன்று பதிவாகி உள்ளது. இதுபோன்று வேறு மாணவிகளிடமும் இவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டார்களா? என்பது பற்றியும் போலீசாரின் விசாரணை தொடர்ந்து வருகிறது.

     

    • தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
    • தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து போராடும்.

    ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஆங்கில நாளேடு டெக்கன் கிரானிகிள் (Deccan Chronicle) நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    "விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் இருந்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் கூட்டணி அரசு அந்தர்பல்டி அடிக்கும்," என்பது தொடர்பாக டெக்கன் கிரானிகிள் செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் அந்நிறுவன அலுவலகத்தை தாக்கி உள்ளனர்.

     


    அத்துமீறி அலுவலகத்திற்குள் புகுந்த கட்சியினர் அங்கிருந்த மேசை, இருக்கைகள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கியதோடு அலுவலக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் சுற்றுச் சுவர் மீது ஏறிவர்கள், அலுவலகத்தின் பெயர் பலகைக்கும் தீ வைத்துள்ளனர்.

    டெக்கன் கிரானிகிள் வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என்று கூறிய தெலுங்கு தேசம் கட்சியினர் விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தனர்.

    நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளர்கள், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர்கள் வெளியிட்ட செய்தி உண்மைதான் என்றும், அதனை எத்தகைய பிரச்சினையாலும் எடுக்க முடியாது என்று தெரிவித்தனர். 

    • தூய்மைப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் நடைபெற்று வருகிறது.
    • அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

    அவிநாசி: 

    அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தூய்மைப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக., உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 18 நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி ஆணையா் பி. ஆண்டவனிடன் கோரிக்கை மனு அளித்தனா்.

    அதில், கூறியிருப்பதாவது:- 5 மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணியால், நகராட்சி முழுவதும் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், சாக்கடை கால்வாய் தூய்மை செய்யப்படாமல் புழு மற்றும் கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணியால் செலவு தொகையும் பல மடங்கு உயா்ந்துள்ளது. மக்களின் வரிப்பணம் பெருமளவு தூய்மைப் பணிக்கு செலவாகிறது. பொது நிதியிலிருந்து புதிதாக தெரு விளக்குகூட அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மனு அளிப்பின்போது, நகா்மன்றத் துணைத் தலைவா் ராஜேஸ்வரி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் லதா சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • விரைவு ரெயிலை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    நெல்லை:

    தெற்குரெயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை கோட்ட நெல்லை கிளை சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்தியசங்க துணைத்தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். எஸ்.ஆர். எம். யூ. நெல்லை கிளை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரராஜா சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோவை-சீரடி சுற்றுலா விரைவு ரெயிலை தனியாருக்கு விற்பனை செய்ததை திரும்பபெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 35 லட்சம் மதிப்பில் நேற்று பூமி பூஜை நடைபெற்றது.
    • இதுவரை புதுச்சேரி அரசு முறையான விளக்கம் அளிக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மதுபான தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டை மறைக்கவே மின்துறை தனியார் மயம் என்ற அறிவிப்பை கொள்கை முடிவாக அரசு அறிவித்துள்ளது என புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மற்றும் கிளிஞ்சல் மேடு பகுதிகளில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை அமைப்பதற்காக, மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 35 லட்சம் மதிப்பில் நேற்று பூமி பூஜை நடைபெற்றது.இதில் பங்கறே்ற வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது- புதுச்சேரி மாநிலத்தில் மின் துறை லாப நோக்கில் இயங்கி வருகிறது. அதனை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியம் இப்போது என்ன அவசரம்?. மின்துறை சொத்துக்களை விற்பது வேறு, ஆனால் அதன் ஊழியர்களை விற்பது எந்த வகையில் நியாயம்?. மின்துறையை தனியார் மயமாக்குவதால் பொதுமக்களுக்கு என்ன லாபம்? என்பது குறித்து அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

    அதே போல் தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில், ஈடுபட்டு வரும் ஊழியர்களை கவர்னரோ, முதல மைச்சரோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ இதுவரை அழைத்துப் பேசாமல் மௌனம் காப்பது ஏன்?. மின் துறையை தனியார் மாயமாக்கினால் அதன் ஊழியர்களின் எதிர்காலம் என்ன என்பதுதான் கேள்வி. அதற்கு இதுவரை புதுச்சேரி அரசு முறையான விளக்கம் அளிக்கவில்லை. புதுச்சேரி மின்துறையை தனியாரிடம் கொடுத்து விட்டு அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது தான் அரசின் நோக்கம். இன்னும் சொல்லப்போனால், புதுச்சேரியில் செய ல்படக்கூடிய மதுபான தொழிற்சாலைகளை மீது ஏற்பட்ட குற்றச்சாட்டை மறைப்பதற்காகவே பாஜக - என்.ஆர் காங்கிரஸ் அரசு மின்சாரத்துறை தனியார் மயம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனை பொது மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர். ஆனால் கவர்னரும், முதல மைச்சரும் மின்துறை தனியார்மயம் ஆக்கினால் ஊழியர்களும், பொதுமக்களும் பாதிக்க பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும், இது அரசின் கொள்கை முடிவு என அறிவித்திருக்கிறார்கள். அப்படி என்ன ஒரு கொள்கை முடிவு என்பதை இருவரும் விளக்க வேண்டும். என்றார்.

    • காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் நேற்று இரண்டாம் நாளாக மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, புதுச்சேரியில் மின் துறை ஊழியர்கள் தொடர்ந்து பலக்கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் இந்த முடிவை கண்டித்து, காரைக்கால் மாவட்ட மின் துறை ஊழியர்கள், நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊழியர்களின் போராட்டத்தால் மின் பழுது பார்த்தல், மின் கட்டணம் கட்டுதல், மின் அளவீடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின் துண்டிப்பு ஏற்படும் பல பகுதிகளில் பொதுமக்கள் 2 நாட்களாக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தத் தொடர் மின்வெட்டை கண்டித்து அம்பகரத்தூர், திருநள்ளார், சேத்தூர், விழுதியூர், நல்லம்பல், திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாம் நாளாக மின் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்ததால் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் தோமாஸ் அருள் வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மின் தடை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காரைக்கால் ரயில் நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர். 

    கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.2100 கோடியை உத்தரவாத கடனாக அளித்துள்ளது. #AirIndia
    புதுடெல்லி:

    இந்தியாவில் முதல்முறையாக விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் தான் தொடங்கியது. பின்னர் 1953-ம் ஆண்டில் மத்திய அரசால் அந்நிறுவனம் கையகப்படுத்தப்பட்டு, ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா, கடந்த சில ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கிவருகிறது.

    பெருகி வரும் நிர்வாக செலவுகள், லாபமற்ற வர்த்தக நடைமுறைகள் ஆகியவற்றால் சுமார் 52000 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் ஏர் இந்தியா சிக்கியுள்ளது. இதனால், இந்நிறுவனத்தை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உறுதியாக தெரிவித்தது.  ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. 

    இதேபோல ஏர் இந்தியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 50% பங்குகளை விலக்கிக்கொள்வது தொடர்பான விளக்க அறிக்கையினையும் மத்திய அரசு வெளியிட்டது. ஏர் இந்தியாவில் மத்திய அரசின் வசமுள்ள பங்குகளை வாங்க டாடா குழுமம், இண்டிகோ விமான நிறுவனம் ஆகியன முயற்சித்தன.

    ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.  காலெக்கெடு முடிந்த நிலையிலும் யாரும் பங்குகளை வாங்க முன்வராததால் மத்திய அரசே கடன்களை சுமக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ரூ.2100 கோடியை மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவாத கடனாக அளித்துள்ளது. 
    கடன் நெருக்கடியில் சிக்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சித்த போதிலும், நாளையுடன் கெடு உள்ள நிலையில் யாரும் வாங்க முன் வரவில்லை. #AirIndia
    புதுடெல்லி:

    இந்தியாவில் முதல்முறையாக விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் தான் தொடங்கியது. பின்னர் 1953-ம் ஆண்டில் மத்திய அரசால் அந்நிறுவனம் கையகப்படுத்தப்பட்டு, ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா, தற்போது கடும் நஷ்டத்தில் இயங்கிவருகிறது.

    பெருகி வரும் நிர்வாக செலவுகள், லாபமற்ற வர்த்தக நடைமுறைகள் ஆகியவற்றால் சுமார் 52000 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் ஏர் இந்தியா சிக்கியுள்ளது. இதனால், இந்நிறுவனத்தை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. 

    இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உறுதியாக தெரிவித்தது.  ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. 

    இதேபோல ஏர் இந்தியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 50% பங்குகளை விலக்கிக்கொள்வது தொடர்பான விளக்க அறிக்கையினையும் மத்திய அரசு வெளியிட்டது. 

    ஏர் இந்தியாவில் மத்திய அரசின் வசமுள்ள பங்குகளை வாங்க டாடா குழுமம், இண்டிகோ விமான நிறுவனம் ஆகியன முயற்சித்தன.
    ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.  இருப்பினும், பங்குகளை வாங்க விண்ணப்பிக்க மே 14-ம் தேதி இறுதி நாள் என்றும், மே 28-ம் தேதி தகுதி வாய்ந்த நிறுவனங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனால், எந்த நிறுவனமும் பங்குகளை வாங்க முன்வராததால், விண்ணப்பிப்பதற்கு இறுதி நாள் மே 31 என அறிவிக்கப்பட்டது. 

    இன்னும் ஒருநாளே, பங்குகளை கோருவதற்கான கால அவகாசம் உள்ள போதிலும், தற்போது வரை எந்த ஒரு நிறுவனமும் விண்ணப்பம் கோரவில்லை. 

    இந்த நிலையில், ஏர் இந்தியா பங்குகளை கோருவதற்காக விண்ணப்ப அவகாசம் இனியும் நீட்டிக்கப்படாது என்று விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  யாரும் விண்ணப்பிக்காததால் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசே தொடர்ந்து நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×